தெமட்டகொடை யுனைடட் கழகம் ஏற்பாடு செய்த 15 வது வருடாந்த பரிசளிப்பு விழா!

கொழும்பு-தெமட்டகொடை யுனைடட் கழகம் ஏற்பாடு செய்த 15 வது வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் மீலாத் நபி போட்டியில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கரம் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு வாசிகசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பெரோஸா முஸம்மில் ,இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர், கலைஞர் கலைச்செல்வன் மற்றும் கழகத்தின் தலைவர்,செயலாளர் மற்றும் அதிதிகள் கலந்து கொண்டனர். 

இதன் போது வறிய பாடசாலை மாணவர்களுக்கு பாதனிகளும் வெற்றி பெற்றவர்களுக்கான கிண்ணங்களும் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
பழுலுல்லாஹ் பர்ஹான்














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -