சுலைமான் றாபி-
நிந்தவூர் முத்தகீன் விளையாட்டுக் கழகம் தனது 10வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுமுகமாக நடாத்திய அணிக்கு 06பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று (16.05.2015) சனிக்கிழமை. நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த இறுதிப் போட்டிக்கு நிந்தவூர் லகான் மற்றும் சம்மாந்துறை SSC ஆகிய இரண்டு அணிகள் தெரிவாகின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சம்மாந்துறை SSC அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது. முதலில் துருப்பெடுத்தாடிய நிந்தவூர் லகான் அணி 05 ஒவர்கள் நிறைவடைவில் 02 விக்கெட் இழப்பிற்கு 62 ஓட்டங்களைப் பெற்றது.
63 எனும் வெற்றி இலக்கினை எட்டுவதற்கு துருப்பெடுத்தாடிய சம்மாந்துறை SSC அணி கடைசி ஓவரில் இரண்டு பந்திற்கு இரண்டு ஓட்டங்கள் தேவைப்பட்ட போது ஐந்தாவது பந்தில் வெற்றி இலக்கினை எட்டிப்பிடித்து 04 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று சம்பியனானது.
இறுதிப்போட்டியில் ஆட்டநாயகனாக ஆட்டமிழக்காமல் 26 ஒட்டங்களினைப் பெற்ற சம்மாந்துறை SSC அணியின் வீரர் இர்பான் தெரிவு செய்யப்பட்டதோடு, இச்சுற்றுத்தொடரின் சிறப்பாட்டகாரராக நிந்தவூர் லகான் அணியின் வீரர் சபீக் தெரிவுசெய்யப்பட்டார்.
இறுதியில் இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு 15,000 ரூபாவும், வெற்றிக்கோப்பையும், தோல்வியுற்ற அணிக்கு 7,000 ரூபாவும் பணப்பரிசும், வெற்றிக்கோப்பையும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், ரீமா பிஸ்கட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.சி.எம் சுபைர், ஒசாகா லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.அஸ்வத் கான், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன், முத்தகீன் விளையாட்டுக் கழகத்தின் நிருவாகசபை சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட விளையாட்டுக்கழகங்களின் தலைவர் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு முத்தகீன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எச். சபீர் மௌலவி அவர்களின் பங்களிப்புடன் ஞாபகச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, நிந்தவூர் முத்தகீன் விளையாட்டுக்கழகத்திற்கு சர்வதேச தரத்திலான மேலங்கியும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். றி
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)