இலங்கை மன்னண் எழுதிய சர்வதேச மனித உரிமைச் சாசனம் நூல் வெளியீடு!

அஸ்ரப் ஏ சமத்-
லங்கையில் பாடசாலைகளில் 8ஆம் வகுப்பில் இருந்து மணித உரிமை மாணிடத்தின் உரிமைகள் மற்றும் விடயங்கள் என பாடப்புத்தகங்களில் உள்ளடக்கப் படல் வேண்டும். 

ஒரு மனிதனது உரிமைகள் பாடசாலை மட்டத்தில் இருந்து மாணவர்களுக்கு புகட்டல் வேண்டும. ஆனால் இந்த இலங்கையில் இக் கல்வி இது வரை மாணவர்களுக்கு புகட்டப்படவில்லை. ஏனைய நாடுகளில் இது பாடசாலை மட்டத்தில் இருந்து போதிக்கப்படுகின்றது. இதனை இலங்கை கல்வியமைச்சர்கள் கவணத்திற்கு எடுத்தல் வேண்டும். என பேராசிரியர் சிவசேகரன் தெரிவித்தார்.

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ரீ.தெச இலங்கை மன்னண் எழுதிய சர்வதேச மனித உரிமைச் சாசனம் -1948 என்ற நூல் வெளியீட்டு நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வு இலங்கை மணித உரிமைகள் சங்கத்தின் தலைவர் இளநெஞ்சன் முர்சீதீன் தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னனி தலைவர் மனோ கனேசன், கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ஆர.இரகுபதி பாலஸ்ரீதரன், டென்மார்க் இருந்து சமுக அபிவிருத்தி சமாதானப் பேரவையின் தலைவர் தர்மகுலசிங்கம், ஜரோப்பிய யூணியன் நாடுகளின் தூதுவர் டேவிட் டேலி மகளிர் விவகார அமைச்சின் இணைப்பாளர் சதீஸ் குமார், ஆகியோறும் உரையாற்றினார்கள்.

நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசீம் உமர் நூலிசரியர் மற்றும் அதிதியான கொழும்பு பல்கழைக்ககழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் என். வெல்வக் குமரண் இருந்து பெற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வில் உரையாற்றிய மனோ கனேசன்- யுத்த காலத்தில் மனித உரிமைகள் விடயங்களுக்காக நானும் காலம் சென்ற பாரளுமன்ற உறுப்பிணர் ரவி ராஜ் இணைந்து கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தினோம். அப்போது அவர் கொலை செய்யப்பட்டார். 

நான் ஒரு போதும ஓடி ஒழியவில்லை. தொடர்ந்து அந்த விடயங்களை முன்னெடுத்து வந்துள்ளேன்.

20 வது தேர்தல் திருத்தம் சம்பந்தமாக இந்த விழாவுக்கு வருவதற்கு முன்பு சகல சிறுபாண்மைக் கட்சிகள் சிறுகட்சிகள் இணைந்து ஜனாதிபதியுடன் பேசினோம். அவர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தற்பொழுது இருக்கின்ற முறையே இடம்பெரும் எனத் தெரிவித்தார். இருந்தும் சிறுபாண்மைச் சமுகத்திடம் பாராளுமன்ற பிரதிநிதிகள் பரிக்கபடும் விடத்து நாம் நீதிமன்றம் சென்று நீதி கேட்போம். 

ஆனால் தற்போது இருக்கின்ற விகிதாசார முறையை சிறுபாண்மைக்கு நன்மை பயக்கும் அது தொடர்ந்து இருக்க வேண்டும். இத் தேர்தல் முறையைக் கொண்டு வந்து சிறுபாண்மை தீர்மாணங்களை தீர்மாணிக்கும் சக்தியை குறைப்பதற்கு எடுக்கும் ஒரு இனவாத நடவடிக்கையாகும். எனத் தெரிவித்தார். கடந்த 20 வருடங்கள் கலப்பு தோதல் முறை முலம் நாம் எமது பிரநிதிகளை பெற்றுவந்தோம். தொகுவாரியாக வந்தால் முஸ்லீம் மலையக மக்கள் தமது பிரநிதித்துவத்தை பெறாது கைசேதப்படுவார்கள். 

கொழும்பு மாவட்டத்தில் அவிசாவளை தொட்டு மட்டக்குழி வரையிலான தமிழ் மக்களுக்க பிரநிதித்துவம் இல்லாது போகும் அதே மாதிரி முஸ்லீம்களும் கலந்து வாழ்கின்றனர். அவர்களது பிரநிதிகளும் இல்லாது போகும். என மனோ கனேசன் இங்கு தெரிவித்தார்.றி






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -