அஸ்ரப் ஏ சமத்-
தோலிலும், மரப்பட்டைகளிலும், எழும்புகளிலும் எழுதபட்ட கையெழுத்து பிரதிகள் ஈரானில் அயத்துல்லா மராசி அல் நஜபி அவர்களின் தனிப்பட்ட நூல் சேகரிப்பு நிலையத்தில் ஒர் இலட்சத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் சேர்த்து வைத்துப் பாதுகாப்பாக்கப்பட்டு வருகின்றன.
இந்நூல் நிலையத்தை இற்றைக்கு இரண்டொரு வருடங்களுக்கு முன் பார்வையிட மணிப்புலவர் மஜீத் அவர்கட்கு கிடைத்தபோது அங்கு தமிழ் மொழியில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதியெதுவும் அங்கில்லை. என்பதுவும், அதிலும் பனையோலையோட்டுப் பிரதி அங்கு இல்லையென்பதுவும் தெரியவந்தது.
இதனை அங்கு கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியில் இலங்கையில் இயங்கிவரும் ஈரானிய முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகததின் தலைவரும் வதிவிடப்பிரதிநிதியுமான செய்யத் ஹமீத் றிசா ஹக்கீகி அவர்களிடம் கலந்துறையாடியபோது மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அவர்களே அங்கு சென்று 03.06.2015ல் ஈரான் கையெழுத்துப் பிரதிகள் சேகரிப்பு நூல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு செய்யத றிசா ஹக்கீகி வினயமாக வேண்டிக் கொண்டதற்கிணங்க மனிப்புலவர் பனையோலை ஏட்டுச் சுவடியுடன் இன்று(30) ஈரான் செல்கிறார்.



