மட்டக்களப்பில் கொள்ளையிடப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்பு!

ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்-
டந்த சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு -செங்கலடி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கொள்ளையிடப்பட்ட கைத்தொலைபேசிகள், கணினிகள் உள்ளிட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த வருடம் நவம்பர் 21 ஆந்திகதி இரவு செங்கலடியில் வழிபாட்டுத்தலமொன்றிற்கருகிலுள்ள வர்த்தக நிலையமொன்று உடைக்கப்பட்டு சுமார் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி டிஆர் விஜயவிக்ரம தெரிவித்தார். 

இதையடுத்து பொலிஸார் மேற்கொண்டுவந்த தொடர் நடவடிக்கையின் பயனாக கிடைத்த தகவலொன்றையடுத்து மட்டக்களப்பு - குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் அவரது வீட்டிலிருந்த கொள்ளைப் பொருட்களும் மீட்கப்பட்டன.

சந்தேக நபரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -