நம்பிக்கையான அணுகுமுறை காரணமாக இலங்கை வந்துள்ளேன் ஜனாதிபதியிடம்-ஜொன் கெரி

100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக புதிய அரசாங்கம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர், இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ள சந்தர்ப்பத்தில் ஜோன் கெரி இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ் நடவடிக்கைளை முன்னோக்கி கொண்டு செல்ல தேவையான சகல ஆதரவுகளையும் இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், நம்பிக்கையான அணுகுமுறை காரணமாக இலங்கை வந்துள்ளதாகவும் ஜொன் கெரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் பொருளாதார பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு, உழல்களை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு, ஜோன் கெர்ரி அவ்விடத்திலேயே இணக்கம் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -