சினிமாவுக்கு வந்ததும் கூச்சம் போய்விட்டது!

மிழ், தெலுங்கில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தமிழில் விக்ரம் ஜோடியாக இவர் நடித்த ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அடுத்து, வேல்ராஜ் இயக்கும் ‘வேலை இல்லா பட்டதாரி’ இரண்டாம் பாகத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இரண்டு தமிழ் படங்களும் கைவசம் உள்ளன.

இந்நிலையில், தான் நடனம் கற்றது குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:– 

என் சினிமா வாழ்க்கை நல்லபடியாக போகிறது. இடையில் சிறிது ஓய்வு எடுத்தாலும் பட வாய்ப்புகள் குறையவில்லை.

கதாநாயகர்களால் தான் நான் நடனம் ஆட கற்றுக்கொண்டேன். சிறுவயதில் எனக்கு கூச்ச சுபாவம் இருந்தது. நான்கு பேர் சேர்ந்து இருந்தால் அந்த இடத்துக்கு போக பயப்படுவேன். பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடும் படி ஆசிரியை வற்புறுத்தினார். நிறைய ஆட்கள் பார்ப்பார்களே என்ற கூச்சத்தால் மறுத்து விட்டேன். அந்த கூச்சமும் பயமும் சினிமாவுக்கு வந்ததும் போய் விட்டது.

படப்பிடிப்பு அரங்கில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இப்போது நடனம் ஆடுகிறேன். முதலில் எனக்கு ஆட வரவில்லை. பெரிய கதாநாயகர்களிடம் இருந்து நடனம் கற்று கொண்டேன். இவ்வாறு சமந்தா கூறினார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -