பசிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் மூன்று அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு கடந்த 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதனயைடுத்து பசில் ராஜபக்ஸ நேற்று முன்தினம் கடுவலை நீதவான் நீதிமன்றத்திற்கு அம்புயூலன்ஸ் வண்டியில் வருகைதந்தார்.

சந்தேகநபர்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக, திவிநெகும திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க மற்றும் அதன் பணிப்பாளரான ஆர்.பீ.வீ.திலகசிறி ஆகியோர் சிறைச்சாலை பஸ் வண்டியில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடயத்தை எடுத்துக்கூறியதன் பின்னர், கடுவலை நீதவான் அம்புயூலன்ஸ் வண்டிக்கு வருகைத்தந்து பசில் ராஜபக்ஸவை விசாரணை செய்த பின்னர் இன்று (07) விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். றி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -