தொடர்பில் கைதுசெய்யப்பட்டகாமுகர்கள் இன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக பொலிஸாரால் அழைத்துச்செல்லப்பட்ட சமயத்தில் பொதுமக்கள் ஒன்று திரண்டு அவர்களை தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொலிசாரின் பாதுகாப்பையும் மீறி, காமுகர்களை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.
காமுகர்களை தாக்குவதற்கு பொதுமக்கள் திரண்டதையடுத்து, பொலிசாரின் பாதுகாப்புடன் காமுகர்கள் வைத்தியசாலைக்குள் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியதையடுத்து, வைத்தியசாலைக்குள் பொதுமக்கள் குவிந்து விட்டனர். வைத்திய பரிசோதனைகளின் பின்னர் அவர்களை மீண்டும் வெளியில் கொண்டு செல்வதற்குள் பொலிசார் மிகவும் சிரப்பட்டனர்.-தீபம்



