மீண்டும் இந்தியன்!

ருகாலத்தில் ஓஹோ என்றிருந்தவர் ஏ.எம்.ரத்னம். இந்தியன், குஷி, ரன், தூள், பாய்ஸ், கில்லி, 7ஜி ரெயின்போ காலனி, முதல்வன், சிவகாசி என்று இவர் தயாரித்த பிளாக்பஸ்டர் படங்களின் எண்ணிக்கை பிற தயாரிப்பாளர்களை மூச்சு முட்ட வைக்கும்.

அப்படிப்பட்டவரை ஜோதி கிருஷ்ணா, ரவி கிருஷ்ணா என்ற அவரது இரு மகன்களும் முறையே படம் இயக்குகிறேன், படம் நடிக்கிறேன் என்று கடன் எனும் அதலபாதாளத்தில் தள்ளினர்.

கடைசியில் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் துர்பாக்கிய நிலைக்கு ரத்னம் தள்ளப்பட்டார்.

கடன்களில் மூழ்கியிருந்த அவரை, அவரது படத்தில் நடித்த எந்த ஹீரோவும் கண்டுகொள்ளாத நிலையில், அஜீத் கூப்பிட்டு வாய்ப்பளித்தார். ஆரம்பம் என்ற ஒரே படத்தில் கடனை அடைத்து, என்னை அறிந்தால் படத்தில் தலைநிமிர்ந்து, இப்போது சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நீண்ட பிளாஷ்பேக்கை கூற காரணம் உள்ளது. தான் தயாரித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் விருப்பம் ரத்னத்துக்கு உள்ளது. இது தொடர்பாக அவர் ஷங்கரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. மீண்டும் அகலக்கால் வைக்கிறாரா ரத்னம் என்பதே அவரை அறிந்தவர்களின் கவலையாக உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -