ரிஷாத்தின் பாடசாலைக்கு ஹுனைஸ் பாறூக் எம்.பி தளபாடங்களை வழங்கிவைத்தார்.

றிப்கான் கே சமான்-

ன் / றிஸாட் பதியுதீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலைக்கு ஹுனைஸ் பாறூக் எம்.பி தளபாடங்களை வழங்கிவைத்தார்.

மீள்குடியேற்றக் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கட்டு அடிப்படை வசதிகள் இன்றிக் காணப்படும் ஆரம்பப் பாடசாலையான முசலி கல்வி கோட்டத்திற்குட்பட்ட மன் / றிஸாட் பதியுதீன் அரசினர் மஸ்லிம் கலவன் பாடசாலைக்கான அதிபர் காரியாளய மேசை, கதிரைகள் மற்றும் அலுமாாி போன்றவற்றை பாராளுமன்ற உறுப்பினர் வழங்கிவைத்தார்.

அண்மையில் இப்பாடசாலைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் இந்த பொருட்களை பாடசாலை அதிபரிடம் கையளித்திருந்தார்.

இதற்கான பெருந்தொகை பணத்தை பாராளுமன்ற உறுப்பினர் தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கியிருந்தார்.

இப்பெருந்தொகை பெறுமதியான பொருட்களை உத்தியோக புர்வமாக கையளிப்பதற்காக பாடசாலைக்குச் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு பாடசாலை மாணவர்களால் மாலை அணிவித்து பாடசாலை சமூகத்தினரால் மிகுந்த வரவேற்பும் அளிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஆசிரியர்கள் மற்றும் இங்கு வருகை தந்திருந்த பெற்றோர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -