றியாஸ் ஆதம்-
அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் எம் முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விவகாரப் பணிப்பாளராகவும், அக்கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனத்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் அண்மையில் வழங்கி வைத்தார்.
தனியார் கல்லூரியின் பணிப்பாளர் நாயகமும் தொழிலதிபருமான அன்வர் எம் முஸ்தபா தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் முன்னால் உறுப்பினராவார்.
சமூக சேவையாளர் அன்வர் எம் முஸ்தபா அவரது கல்லூரியூடாக தேசிய ரீதியாக சுமார் மூவாயிரம் மாணவர்களுக்கு புலமைப்பரிசிலினை வழங்கி இலவசமாக கல்வி கற்பதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அன்வர் எம் முஸ்தபா அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் கட்சியின் இளைஞர் அமைப்புக்களை புனரமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
.jpg)