பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி துமளி காரணமாக பாராளுமன்றம் இன்றைய தினம் இரண்டாவது முறையாக 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூண மகேந்திரனை பதவி விலக்குமாறு கோரி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணையை காலதாமதமின்றி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
இதன் போது அவை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது இவ்விடயம் தொடர்பில் விவாதித்ததாக சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து பாராளுமன்றில் அமளி துமளி ஏற்பட்டதால் இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 நிமிடங்கள் பாராளுமன்றம் இன்று ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(பின்ணிணைப்பு) இதேவேளை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, பாராளுமன்றத்தை நாளை வரை ஒத்திவைத்ததாக எமது பாராளுமன்ற செய்தியாளர் சற்று முன்னர் தெரிவித்தார்.(ந)
