வில்பத்து வனவள தொடர்பில் குற்றம் நிருபித்தால் பராளுமன்றப் பிரநிதித்துவத்தை இழக்க தயார்- ஹூனைஸ் பாருக்

அஸ்ரப் ஏ சமத்-
வில்பத்து வன வள பிரதேசத்திற்குள் எந்தவொரு முஸ்லீம்களோ குடியிருப்புக்களோ இடம்பெறவில்லை. அவ்வாறு இடம்பெற்றுள்ளது என யாரும் நிருபித்தால் தான் தனது பராளுமன்றப் பிரநிதித்துவத்தை இழக்க தயாராக உள்ளேன். என பாராளுமன்ற உறுப்பினர் - ஹூனைஸ் பாருக் தெரிவித்தார்.

இன்று காலை தமிழ்-முஸ்லீம் கூட்டமைப்பின் தலைவர் ஆனந்த சங்கரியின் தலைமையில் அவரது கொழும்பு அலுவலக வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பனர் ஹூனைஸ் பாருக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இம் மாநாட்டில் இவ் கூட்டணியின் செயலாளர் எம்.ஜ.எம்.மொஹிடீனும் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஹூனைஸ் பாருக் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில் - 

சில தனியார் ஊடகங்கள் இதனை பெரிது படுத்துகின்றன. கொழும்பில் இருந்து ஏதோ ஒரு நூதணசாலையை பார்ப்பது போன்று நாளாந்தம் தெற்கில் இருந்து பல அமைப்புக்கள் செல்கின்றனர். சில ஊடகங்களும் இதனை வேறுவிதமாக பெரிதுபடுத்தி கூறுகின்றனர். 

இந்தியாவின் தமிழ் நாட்டில்; இருந்து கொண்டு இலங்கைப்பிரச்சினைகளை பேசுவது போன்று தெற்கில் இருந்து கொண்டு சில அரசியல்வாதிகளும் சில அமைப்புக்களும் இதனை பெரிது படுத்துகின்றனா. இதற்கு ஒரு உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் தனது மூக்கை நுழைத்துக்கொண்டு அவர் அதனை பெரிதுபடுத்துகின்றார். காரணம் அப்பிரதேச மக்களது வாக்குகளை கவருவதற்கு. அப்பிரதேசம். எனது பிரதேசம் எனக்கு வாக்களித்த மக்கள்.

இந்தப் பிரதேசம் எனது தந்தை வாழ்ந்த பிரதேசம் இப்பிரதேச மக்கள் எனது உறவினர்களும் எனக்கு வாக்களித்த மக்களும் ஆவார்கள். எனது பெயரில் ஹூனைஸ் நகர் மற்றும் ஹூனைஸ் பாடசாலையும் இப்பிரதேசத்தில் உள்ளது. 

இப்பிரதேசத்தின் அபிவிருத்திக் குழு தலைவராக நான் செயல்பட்டுவந்தேன். மேற்படி முசலி பிரதேசத்தில் குடியேறிய மக்களுக்கு காணி சட்டரீதியாக காணிகள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 1970ஆம் ஆண்டு பள்ளிவாசல், மற்றும் கிணறுகள், உள்ளன.

வில்பத்து ஒன்றரை கி.மீற்றருக்கு அப்பால் தான் காணி கச்சேரியை நடாத்தி, பிரதேச செயலாளர், ஜனாதிபதி விசேட அணி, காட்டுவள திணைக்களம், வனவளத் திணைக்களம் போன்ற 18 பேர் கொண்ட அணியே நேரடியாக இவ்விடயங்களை கவனித்து சட்டரீதியாக வில்பத்து வெளியேதான் முஸ்லீம்கள் சிலர் குடியேறியுள்ள்னர். 

ஆனால் இவ்விடயத்தில் உள்ளூர் அரசியல்வாதி; அவரது உள்ளுர் பிரதிநிதிகளும் வைத்துக் மூக்கை நுழைத்து இவ் விடயத்தை பெரிது படுத்துகின்றார்.

கடந்த வருடம் கிளிநொச்சியில ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போதே வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே காணி உறுதிகளை சில முஸ்லீம்களுக்கு வழங்கியுள்ளார். 

இதனைவிட ஹம்பாந்தோட்டை வாழ்ந்த மக்களை 'நாமல் கம' என நடு வனந்திரத்திற்குள்; எத்தனையோ சிங்கள கிராமங்களை வடக்கில் ஏற்படுத்தி குடியேற்றியுள்ளனர். தனித் தனி சிங்கள கிராமங்களை . அவர்கள் திட்டமிட்டு குடியேற்றினார்கள், இவர்களுக்கு இராணுவம் பாதுகாப்பும் வழங்குகின்றது. இதனைப் பற்றி எவ்வித ஊடகமோ பௌத்த இயக்கங்களோ கண்டுகொள்ளவில்லை.

1990 இடம்பெயர்ந்த மக்கள் தற்பொழுது 23 வருடங்களுக்குப் பிறகு தமது சொந்த பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடங்களுக்க செல்லும்போது அப்போது ஒரு குடும்பமாக இருந்தவை 3, 4 குடும்பங்களாக பெருகியுள்ளது. எனது குடும்பத்தில் கூட 13 குடும்பங்கள் பெருகியுள்ளன. அதில் இரு குடும்பங்களே குடியேறியுள்ளனர். ஏனையோர் இன்னும் தற்காலிகமாகவே வாழ்ந்து வருகின்றனர். 

இம்மக்கள் புத்தளத்தில் ;வாழ்ந்தபோதும் கடந்த 3 வருடத்திற்கு முன் புத்தளத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டமொன்றில் வடக்கு முஸ்லீம்கள் இலட்சக்கணக்கில் புத்தளத்தில் வாழ்கின்றனர் புத்தளத்தில்; முஸ்லீம் பிரதிநிதித்துவம் மற்றும் சனத்தொகை அதிகரிக்கும். என புத்தள மாவட்ட சிங்கள பாராளுமன்ற உறுப்பனர்கள் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்தனர். 

அதன் பிறகு வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்திலேயே வடக்கு முஸ்லீம்கள் மிPள்க் குடியேற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியிடம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவிடமும் கோரிக்கையை நான் விடுத்தேன். 

அப்போதுதான் 18 பேர் கொண்ட அரச அமைச்சின் செயலாளர்கள். ஜனாதிபதி செயலனி ஆகியன இணைந்து வடக்கில் காணிகளை அடையாளம் கண்டு இதனை முறைப்படியாக ஒவ்வொரு குடும்பத்தின் பதிவுகள் அவர்கள் வாழ்ந்த வரலாறு, என்பன பரிசீலிக்கப்பட்டு காணிகள் கொடுக்கப்பட்டன. 

இராணுவம், கடற்படை, என பல படைகள் முஸ்லீம்களது பரம்பரை நெற்காணிகள், மற்றும் அவர்கள் வாழ்ந்த இடங்களை ஆகிரமித்து இரானுவ முகாம்களாக்கியதனால் முஸ்லீம்களது நெற்காணிகள் கூட இதுவரை வழங்கப்படவில்லை.

இவ் விடயங்கள் பற்றி சகல தஸ்தாவேஜுக்களும் தன்னிடம் உள்ளது. யார் தனிப்பட்ட ரீதியில் காணிகள் எடுத்துள்ளார்கள் அதுபற்றி தாங்கள் உரிய பிரதேச செயலாளரை கண்டு கேட்க முடியும். அதுபற்றி நானும் தகவல்களைத் சேகரிக்கின்றோம் அவ்வாறு கண்டுபிடித்தால் அதனையும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவோம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -