ஷிரந்தி ராஜபக்சவை பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைத்தமை அரசியல் பழிவாங்கல் என அவரது மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நிதி மோசடி குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணையில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆஜராகுமாறு தன்னுடைய அம்மா ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள செய்தி சேவை ஒன்றிற்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரிலிய சவிய என்ற அமைப்பில் அரசியல் நடத்தவில்லை. சுகாதாரம் தொடர்பிலான சேவைகளே அதில் இடம்பெற்றன, மக்களின் நோய் தீர்க்கும் ஒரு அமைப்பாகவே அது காணப்பட்டது.
இது முற்றிலுமான அரசியல் பழிவாங்கலாகும். நானும் எனது தந்தையும் மாத்திரமே அரசியலில் ஈடுபட்டிருந்தோம்.எனது அம்மாவிடமும் தம்பிமாரிடமும் இவ்வாறு செயற்படுவது மிகப்பெரிய அரசியல் பழிவாங்கல். எனது அம்மா எப்பொழுதுமே அரசியல் இருந்து விலகி இருந்தவர்.
என்னுடைய அம்மாவை இப்படி நடத்துவது பிழையான ஒரு செயற்பாடாகும்.
பழிவாங்கல் நடவடிக்கைகள் நல்லாட்சி ஆகாது, என்னுடைய அம்மாவை இலக்கு வைத்திருப்பதில் இருந்து அது வெளிப்படையாக காணமுடிகின்றது.
அம்மாவை நிதிக் குற்ற புலனாய்வு பிரிவிற்கு அழைத்தமை தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளவுள்ளேன். அதற்கமைய குறித்தப்பட்ட தினத்தில் அம்மா நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுவாரா என்பது குறித்து பிறகு அறிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
sa
