கல்முனை அஸ்-ஸம்ஸ் விளையாட்டுக் கழகம் 54 மேலதிக ஓட்டங்களால் வெற்றி!

எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை அஸ்-ஸம்ஸ் விளையாட்டு கழகத்திற்கும், கல்முனை யங் போர்ஸ் விளையாட்டுகழகத்துக்கும் இடையில் நடைபெற்ற சினேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டியில் அஸ்-ஸம்ஸ்விளையாட்டு கழகம் 54 மேலதிக ஓட்டங்களால் வெற்றிபெற்றனர்.

கல்முனை சந்தாங்கோணி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்படுத்தாடிய அஸ்ஸம்ஸ் அணியினர் சகல விக்கட்டுக்களையும் இழந்து143 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்படுத்தாடிய யங் பேர்ஸ் அணியினர் சகல விக்கட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தனர்.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக எமது அஸ்-ஸம்ஸ் கழகத்தின் ஆலோசகரும் கல்முனை அபிவிருத்திபோரவையின் தலைவரும், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஏ.பி.எம்.அஸ்கர், கெளரவ அதிதியாக கல்முனைக்குடி-3 கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் தேசமானிய ஏ.பி.ஜவ்பர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக எம்.தில்ஸான் தெரிவு செய்யப்பட்டார்.

இவருக்கான விருதினை அதிதிகள் வழங்கிவைத்தனர்.

புதிதாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட கல்முனை அஸ்-ஸம்ஸ் விளையாட்டுக்கழகத்தினர் தொடர்ந்தும் வெற்றிவாகை சூடி வருக்கின்ற வளர்ந்துவரும் கழகமாக உள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -