நாகூர் ஈ.எம். ஹனிபாவின் மறைவு; அமைச்சர் ஹக்கீமின் அனுதாபம்

சை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் மறைவையிட்டு அனுதாபச் செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களினதும், கணிசமான தமிழ் மக்களினதும் உள்ளங்களை தனது பரவசமூட்டும் பக்திப் பாடல்களால் கவர்ந்திழுத்த இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் மறைவு இஸ்லாமிய இசைத்துறைக்கு பாரிய இழப்பாகுமென்று நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

இசை முரசு ஈ.எம். ஹனிபா தமிழ் நாட்டில் சென்னை நகரில் காலமான செய்தி அறிந்து பெரிதும் கவலையடைந்தேன். இஸ்லாமிய தமிழ் இசைத் துறைக்கு அவராற்றிய பணி அளப்பரியதாகும். 

கணீர் என்று ஒலிக்கும் அன்னாரது குரல் வளம் மிக்க இஸ்லாமிய கீதங்களை அடிக்கடி தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் கண்டும் கேட்டும் வருகின்றோம். அன்னாரது அயல் நாடான எமது இலங்கைக்கு அவர் தமது வாத்தியக் குழுவினருடன் பல தடவைகள் வருகை தந்து இசைக் கச்சேரிகளை நடாத்தி மக்கள் மத்தியில் பெயரும், புகழும் பெற்றுத் திகழ்ந்தவர். 

அவரது இசையை விரும்பி கேட்பதற்கென்றே ஒரு ரசிகர் குழாம் இருக்கின்றது. நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அன்னார் இறுதியில் இவ்வுலக வாழ்வை நீத்து நிலையான மறுமை வாழ்விற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற மேலான சுவனபதியை நிரந்தரமான தங்குமிடமாக ஆக்கி அருள்வானாக!.

அன்னாரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும்,  அபிமானிகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத்  தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் 
ஊடகச் செயலாளர் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -