இஹ்திஸாம், அக்கரைப்பற்று-
நாடறிந்த பர்ஸான் எக்ரோ டெக்; (Farzan Agro Tech) நிறுவனத்தின் புதிய நிறுவனமான FBC Show Room காட்சி அறை இன் திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள கோப் சிற்றி கட்டடிடத்தில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்ட FBC Show Room காட்சி அறை இன் திறப்பு விழா FBC Show Room இன் தலைவர் எம்.எம்.றியாட் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபன செயற்பாட்டுப் பணிப்பாளரும், அக்கரைரப்பற்று மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவருமான அல்-ஹாஜ் எஸ்.எல்.எம்.ஹனிபா (மதனி) அவர்கள் கலந்து கொண்டு FBC Show Room காட்சி அறை இனைத் திறந்து வைத்தார்.
இத் திறப்பு விழாவில் கௌரவ அதிதிகளாக மொனராகல மாவட்ட பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் அல்-ஹாஜ் எஸ்.எல்.எம்.அலியார், சட்டத்தரணி எம்.ஐ.உவைஸ்ஸுர் ரஹ்மான், பொலிஸ் நிலையப் பொறுப்பதிபாரி ஏ.எல்.எம்.ஜெமீல், அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளி வாயல், பட்டின ஜும்ஆ பள்ளி வாயல், புதுப்பள்ளி ஜும்ஆ பள்ளி வாயல் முதலியவைகளின் தலைவர்கள், வர்த்தகர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளி வாயல், பட்டின ஜும்ஆ பள்ளி வாயல், புதுப்பள்ளி ஜும்ஆ பள்ளி வாயல் முதலியபள்ளிவாயல்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நவீன டிஜிடல் கடிகாரங்களையும் மற்றும் தரை விரிப்புகளையும் ஜும்ஆ பள்ளி வாயல்களின் தலைவர்களான அல்ஹாஜ் ஏ.எம்.சாலிமு, டி.எஸ்.ஆதம் லெப்பை, ஏ.எல்.ஏ.றஸீட் ஆகியோh பெற்றுக் கொண்டனர்.
இங்கு வெளிநாட்டிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட சமயலறை மற்றும் குளியலறை உபகரணங்கள், அதி நவீன வீட்டு உபகரணங்கள், அலங்கார சுவர்க் கடிகாரங்கள்,சிறுவர்கள், மாணவர்களுகக்கான உபகரணங்கள், தச்சு வேலை உபகரணங்கள், அன்பளிப்பு பொருட்கள், டுநுனுபல்ப் வகைகள் முதலியவைகளை தலை நகர் விலையில் உத்தரவாதத்துடன் மெத்தமாகவம், சில்லறையாகவும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)