மாமனார் மாமியாருக்கு டீயில் சிறுநீர் கலந்து கொடுத்த மருமகள்!

த்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் தீபக். 34 வயதான இவரது மனைவி பெயர் ரேகா நாக்வன்ஷி (30). இவர்கள் இருவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. 

இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இருவரின் பெற்றோர்களும் பார்த்து வைத்த திருமணம் தான்.

திருமணமாகி வந்தது முதலே, மாமியர் சூரஜ் (60) நாத்தனாரும் ரேகாவை கொடுமைப்படுத்தி உள்ளனர். ரேகாவை ஒரு அடிமை போல வேலை வாங்கி உள்ளனர்.பொறுத்து பார்த்த ரேகா கணவரிடம் வற்புறுத்தி மெல்ல மெல்ல தனிக்குடித்தனம் செல்ல சம்மதிக்க வைத்து விட்டார். முதலில் மறுத்தாலும் மனைவிக்காக தனிக்குடித்தனம் சென்றார். பின்னர் சில நாட்களில் தீபக் தனிகுடித்தனம் வேண்டாம் நாம் குழந்தைக்காக எங்கள் வீட்டுக்கே போகலாம் என்று வற்புறுத்தியுள்ளார்.

சில நிபந்தனைகளுடன் இதற்கு ரேகா சம்மதித்து உள்ளார்.கணவர் வீட்டுக்கு வந்த பிறகு மாமியார் சூரஜ், மாமனார் அஜீத், நாத்தனார்கள் கொடுமை தாங்க முடியவில்லை.அவர்களை பழிவாங்க இறுதியில்தான் ஒரு நூதன ஐடியா அவருக்கு வந்துள்ளது. அதாவது தனது மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்களுக்கு தரும் டீயில் சிறு நீர் கழித்து அதைக் கலந்து கொடுத்து வந்து உள்ளார். அவர்கள் டீ குடிக்கும் போது உள்ளூர சிரித்து மகிழ்ந்து உள்ளார்.

இதை ஒருநாள் மாமியார் சூரஜ் கண்டு பிடித்து விட்டார். கையும் களவுமாக பிடிபட்டதும், தான் கடந்த ஒரு வருடமாக இவ்வாறு செய்து வருவதாகக் கூறி உள்ளார். இதை கேட்ட தீபக்கின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மாமியார் சூரத் கூறும் போது:-

இதுபோல் ரேகா வாரம் ஒருமுறை அல்லது இருமுறை செய்து உள்ளார். ஆனால் அவர் இவ்வாறு செய்வார் என நாங்கள் நினைக்கவில்லை.அவர் டீ கொடுக்கும் போது சிரித்து கொண்டே கொடுப்பார்.அப்போது கூட எங்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.நாங்கள் டீயை வாங்கி குடித்துள்ளோம்.ஒரு முறை நான் கிச்சனுக்கு செல்லும் போது தான் அவர் கையும் களவுமாக பிடிபட்டார் என கூறினார்.

இதையடுத்து, மாமனாரும் மாமியாரும் போலீசில் போய் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசாரோ, இதற்காய் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறி விட்டனர். இதனால் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டது. கடந்த ஒரு வருடமாக தங்களை இழிவுபடுத்தி வந்த தங்களது மருமகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும் என்று அவர்கள் ரேகா மீது வழக்கு தொடர்ந்து உள்ளனர். வழக்கு தொடர்ந்ததில் இருந்து தற்போது ரேகா அவரது கணவர் தனிகுடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -