இலங்கை பாகிஸ்தான் இடையே ஆறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும்!

னாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானை சென்றடைந்த பின்னர் ஆறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் எயார் சீப் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி தெரிவித்துள்ளார். 

இஸ்லாமாபாத் சென்றடையும் இலங்கை ஜனாதிபதிக்கு, 21 துப்பாக்கி வேட்டு மரியாதை நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது பாகிஸ்தானின் உயர்மட்ட அதிகாரிகளுடன் உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் மற்றும் இருதரப்பு விவாதங்கள் நாளை இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறிப்பாக விளையாட்டு, கப்பல் போக்குவரத்து, அணுசக்தி போன்ற துறைகள் உள்ளிட்ட ஆறு ஒப்பந்தங்களில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் பொருளாதாரம் உள்ளிட்ட பலதுறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -