தமிழ் சினிமாவின் இப்போதைய வசூல் பேய் படம் தான். பீட்ஸா, யாமிருக்க பயமேன், காஞ்சனா போன்ற படங்களின் இமாலய வெற்றி தான் இந்த பேய் படங்களுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.
பேய்கள் என்றாலே பெண்கள் தான் என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டனர். அதனால் என்னவோ தற்போது வரவிருக்கும் பேய் படங்களில் கூட முன்னணி கதாநாயகிகள் பேய்களாக உருவெடுத்துள்ளனர். இளமை கொஞ்சும் அழகோடு வந்தவர்களை, இனி அகோரிகளாக பார்க்கப் போகிறோம்.
அந்த வகையில் மாயா என்ற பேய் படத்தில் நயன்தாராவும், பெயரிடப்படாத ஒரு பேய் படத்தில் த்ரிஷாவும், சௌர்கார் பேட்டை படத்தில் அருந்ததியும், லட்சுமி ராயும் பேய்களாக வந்து பயமுறுத்தப் போகிறார்கள்.
