செய்யித் அப்ஷல்-
அண்மைக்காலமாக ஏறாவூர் வாளியப்பா பள்ளிவாசல் காணியில் பாடசாலை ஒன்று அமைப்பதற்கான பூர்வாங்க வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் பாடசாலை அமைப்பதற்கு பள்ளிவாசல் நிருவாகம் பூரண சம்மதம் தெரிவித்து இருந்த போதும் கடைசி நேரத்தில் பள்ளிவாசல் காணிக்குள் பாடசாலை அமைக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிவாசல் நிருவாக தரப்பிற்கும் பாடசாலை அமைப்பதற்கு முயற்சிக்கும் தரப்பிற்கும் இடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டு விடயம் பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது .
இந்த வேளையில் பள்ளி வாசலின் நிருவாகம் முறைப்படி தெரிவு செய்யப்படவில்லை என்றும் அதன் நிதி தொடர்பான விடயங்களில் எந்த வித வெளிப்படைத் தன்மைகளும் இல்லை எனக் கூறி ஜாமாத்தார் சார்பில் துண்டுப் பிரசுரம் ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)