எம்.ஜே.எம்.சஜீத்-
அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்றது.
தீகவாபி பிரதேசம் ஆரோக்கியமான குழந்தையை உருவாக்குவதன் மூலம் நாட்டில் ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்கி நாட்டை அபிவிருத்திப்பாதையில் கொண்டு செல்ல முடியும்.
எதிர்காலத்தின் சிறந்த சமூதாயத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டமானது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும், என கல்முனை பிராந்திய சுகாதார பிரதிப்பணிப்பாளர் டாக்டர் இஸ்ஸடீன் தெரிவித்தார்.
அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை, தீகவாபி, ஆலங்குளம் போன்ற பிரதேச கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகரி டாக்டர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை உதவிப்பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், தீகவாபி ரஜமஹா விகாரதிபதி போதிபல சந்தானாந்த நாயக்க தேரர், டாக்கர் டபில்யு. எம். ஜயவீர, டி.டி. ராய்கம்கொரல உட்பட சுகாதார உயரதிகாரிகளும், கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை, தீகவாபி, ஆலங்குளம் பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி, பாலுட்டும் தாய்மார்களுக்கு தலா ரூபா 2000 பெருமதியான போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இப் பொதிகளில் 10 வகையான போஷாக்கு உணவு வகைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)