பொத்துவிலில் உணவகங்கள் பரிசோதனை 10 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

எம்.ஏ. தாஜகான்-
2015.04.6-2015.05.8 வரையான காலப்பகுதியை உலக சுகாதார நிறுவனம் உணவுப் பாதுகாப்பு மாதமாக அமுல் படுத்தியுள்ளது. இந்த மாத காலத்துள் கல்முனைப்பிரிவில் 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உணவு சம்பந்தமான பரிசோதனையினை அந்தந்த சுகாதார வைத்திய காரியாலய அதிகாரி தலைமையில் கல்முனை பிராந்திய பரிசோதனைக்குழுவினரால் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் கல்முனைப் பிராந்திய பரிசோதனைக்குழு பொத்துவில் சுகாதார வைத்திய பிரிவில் உள்ள உணவு கையாளும் நிலையங்களை பரிசோதனைக்குட்படுத்தியது. அந்த வகையில் இன்று (23) திகதி பொத்துவிலில் 29 கடைகள் மேற்பார்வை செய்யப்பட்ட பொழுது சுத்தம், சுகாதார தன்மையுடன் உணவினை விற்பனை செய்யாத ஹோட்டல்கள், தேநீர் கடைகள், வெதுப்பகம் உட்பட 10 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளும் முகமாக பொத்துவில் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இந்த மேற்பார்வை சுற்றி வளைப்பில் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம்.சமீம், மாவட்ட மேற்பார்வைப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம், உணவு மருந்துப் பரிசோதகர் எஸ்.தஸ்தகீர், மற்றும் பொத்துவில் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட பலர் கலந்து மேற்பார்வை செய்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -