இனம் தெரியாதோரினால் உடைக்கப்பட்ட அஷரஃப் ஞாபகார்த்த பூங்கா!

 எம்.ஐ.சம்சுதீன்-
சாய்ந்தமருது கடற்கரை பூங்கா இனம் தெரியாதோரினால் உடைக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் பொருளாதார அமைச்சின் 'புறநெகும' திட்டத்தின் கீழ் கல்முனை மாநகரசபையினால் ரூபாய் 1,067,037,720 செலவில் நிர்மாணிக்கப்பட்ட சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா பூர்த்தி செய்யப்படாத நிலையில் சென்ற வருடம் கல்முனை மாநகரசபையில் முதல்வர் சட்டமுதுமாணி முகம்மட் நிஸாம் காரியப்பர் அழைப்பின் முன்னாள் நீதிஅமைச்சரும், தற்போதைய நகர அபிவிருத்தி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீ.மு.கா தலைவருமான அல்ஹாஜ் றவூப் ஹக்கீம் அவர்களினால் (23.10.2014) அன்று பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. 

இவ்வைபவத்தில் இப்பிரதேச கட்சியின் சகல அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர். ஸ்ரீ.மு.கா முன்னாள் தேசியத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷரஃப் அவர்களின் பிறந்த தினத்தை ஒட்டி அமைச்சர் றவூப் ஹக்கீம்இனால் திறந்து வைக்கப்பட்டது. 

(24.10.2014) மறுநாள் நல்லிரவு பூங்காவின் பிரதான நுழைவாயிலின் மேல் தொங்கவிடப்பட்ட அஷரஃப் ஞாபகார்த்த பூங்கா என்ற பெயர்ப்பலகை ஒரு சில சுயநலவாதிகளால் உடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். 

நேற்று(20.04.2015) ல் பூங்காவிற்குள் அழகுபடுத்தப்பட்ட நிலையில் மக்கள் பாவனைக்காக வைக்கப்பட்டிருந்த கதிரைகள் பல உடைக்கப்பட்டிருப்பதையும் மேலும்பல அசம்பாவிதங்களும் நடந்துள்ளன. இது விடயத்தில் கல்முனை மாநகரசபையும் சாய்ந்தமருது பிரதேச உறுப்பினர்களைப் பற்றியும் மக்கள் மத்தியில் பல விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதேவேளை அமைச்சர் றவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்ட கடற்கரைப்பூங்கா 

23.10.2014 இல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட பூங்கா மறுநாள் (24.10.2014) மீண்டும் கல்முனை மாநகரசபையினால் மக்கள் பாவனை மறுக்கப்பட்டு பிரதான நுழைவாயில் கதவுகள் பூட்டு போடப்பட்டு இன்று வரைக்கும் இந்நிலமை காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.(ந-த்)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -