மாண்புறும் மருதமுனை வரலாற்றுப் பதிவுகள்' நூல் வெளியீடு


பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தருமான அல்-ஹாஜ் ஏ.ஆர்.ஏ.சத்தார் தொகுத்துள்ள 'மாண்புறும் மருதமுனை வரலாற்றுப் பதிவுகள்' நூல் வெளியீடும,;மருதமுனை மண்ணுக்கு மணம் சேர்த்தோர் கௌரவிப்பு விழாவும் எதிர்வரும் சனிக்கிழமை (25-04-2015)பி.ப.4.30 மணிக்கு மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கில் மிகவும் விமர்சையாக நடைபெறவுள்ளது. 

திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்எம்.எம்.ஹரீஸ் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த முப்பெரும் விழாவில் மருதமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்த பல்துறை சார்ந்த 160 பேர் வாழ்நாள் சாதனையாளர்களாக பதக்கம் அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இதில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றஊப் ஹக்கீம் கலந்து கொண்டு நூலை வெளியீட்டு வைப்பதுடன் சாதனையாளர்களையும் கௌரவிக்கவுள்ளார். 

சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும்,சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸன் அலி,கிழக்கு மாகாண முதலமைச்சர் இஸட்.ஹாபிஸ் நஸீர் அஹமட்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிம்,முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவர் பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

மேலும் கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல்,ஏ.எல்.எம்.நஸீர்,ஏ.எல்.தவம்,சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் ஆகியோருடன் விஷேட அழைப்பாளர்களாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம்,தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -