அட்டாளைச்சேனை மர்ஹூம் மசூர் சின்னலெப்பை ஞாபகார்த்த சந்தை சதுக்கம் திறப்பு விழா

அபு அலா -

ட்டாளைச்சேனையில் ரூபா 17 மில்லியன் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட மர்ஹூம் மசூர் சின்னலெப்பை ஞாபகார்த்த சந்தை சதுக்கம் திறப்பு விழா தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் உச்பீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை (20) அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில், உதவி தவிசாளர் ஏ.எல்.அமானுள்ளா மற்றும் உறுப்பினர்களான எ.எஸ்.எம்.உவைஸ், என்.எம்.யாசீர் ஐமன், ஐ.எஸ்.முனாப் ஆகியோர் கலந்து கொண்டு மர்ஹூம் மசூர் சின்னலெப்பை ஞாபகார்த்த சந்தை சதுக்க கட்டட திறப்பு விழா தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர்.

மே மாதம் 02 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள இச்சந்தை கட்டட திறப்பு விழாவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -