கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மத்தின் செயற்பாடுகள் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுத் தளத்தை ஆட்டங்காணச் செய்து வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தனது முதலமைச்சுப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் உணர்வுகளை மதியாது செயற்பட்டு வருவதாக அவர்மீது குற்றம் சுமத்தப் படுகின்றது.
திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் அவரிடம் சில நியாயங்களை எடுத்துக் கூறியும் அவர் அவர்களை உதாசீனப்படுத்தி அனுப்பியதாகக் கூறப்படுகின்றது. இது சம்பந்தமான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.