ரெய்னாவை தொடர்ந்து கோஹ்லிக்கும் விரைவில் திருமணம்!

ந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவின் திருமணத்தை தொடர்ந்து சக வீரர் கோஹ்லியும் விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டத்தை பார்க்க கோஹ்லியின் காதலியான அனுஷ்கா சிட்னி சென்றார். ஆனால் கோஹ்லி ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழக்க பெரும் விமர்சனங்கள் எழுந்தது.

மேலும் இவரின் இந்த சொதப்பலுக்கு காரணம் அனுஷ்கா தான் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை திட்டித் தீர்த்தனர்.

இந்நிலையில் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவின் திருமணம் இன்று டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹொட்டலில் நடைபெறுகிறது. இதில் கோஹ்லி தன் காதலியான அனுஷ்கா சர்மாவுடன் கலந்து கொள்கிறார்.

இதற்கிடையே டெல்லியில் உள்ள விராட் கோஹ்லி வீட்டுக்கு அனுஷ்கா சர்மா சென்றுள்ளார். அனுஷ்கா சர்மா, கோஹ்லி வீட்டுக்கு வருவதை முன்னிட்டு வீட்டை சுற்றிலும் பலத்த பாதுபாப்பு போடப்பட்டிருந்தது.

வீட்டில் விராட் கோஹ்லியின் பெற்றோர்களை சந்தித்து அனுஷ்கா சர்மா பேசினார். திருமணம் குறித்து பேசுவதற்காகவே விராட் கோஹ்லியின் வீட்டுக்கு அனுஷ்கா சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து, விராட் கோஹ்லியும் திருமண வாழ்க்கைக்குள் நுழையலாம் என செய்திகளும் பரவி வருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -