கல்முனைக் கடற்கரை தர்கா நிகழ்வுக்கு சென்ற சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது!

ல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்முனைக் கடற்கரை தர்கா நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் நேற்றிரவு (01) கைது செய்யப்பட்டிருப்பதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பஷீர் சேகுதாவூத் வித்தியாலயத்தைச் சேர்ந்த 7 வயதான இந்தச் சிறுமி தனது பாட்டியுடன் கல்முனைக் கடற்கரை தர்கா வருடாந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த சமயம் புதனிரவு காணமாமல் போயுள்ளார்.

உடனடியாக அங்கு நின்றவர்களின் உதவியுடன் சிறுமியைத் தேடிய பொழுது கடற்கரை தர்காவுக்குச் சூழலில் மையத்துப் பிட்டி பஸ்கள் நிறுத்துமிட மறைவில் குறித்த சிறுமி இளைஞனால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கண்டு மக்கள் சிறுமியைக் காப்பாற்றியதோடு சம்பந்தப்பட நபரையும் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

சிறுமி தற்சமயம் கல்முனை அஷ்ரப் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வாழைச்சேனை புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த இஷ்ஹாக் பாறூக் (வயது 28) என்ற நபர் பொலிஸாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய் சிறுமியை பாட்டியின் பொறுப்பில் விட்டு விட்டு மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சாஜில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -