நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவையும் மீறி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்னால் நேற்று வியாழக்கிழமை (23) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்கிய அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்வதற்காக மேற்படி ஆணைக்குழு விடுத்திருந்த அழைப்பின் பேரில், அவர் நேற்று அங்கு சென்றிருந்த போதே அவருக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பொது பல சேனா அமைப்பு மற்றும் இராவணா சக்தி என்ற பௌத்த பிக்குமார்களின் அமைப்புக்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்திருந்தன. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, டலஸ் அலஹப்பெரும, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(ஸ)
