ஒரு இராணுவ முகாமையேனும் வௌியேற்றாமல், 1000 ஏக்கரை விடுவிப்பதாக கூறி 400 ஏக்கரை மட்டுமே விடுவித்து, அரசியல் ரீதியாக தனக்கு இலாபம் தேடும் பிரதமருடன் நான் எப்படி கைகுழுக்கி மகிழ்ச்சியை வௌியிடுவது என, வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. போர் முடிந்த பின்னர் அவர்களுக்கு வடமாகாணத்தில் எந்த வேலையும் இல்லை. வேண்டுமெனில் பொலிசாரின் தொகையைக் கூட்டட்டும் எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இராணுவத்தினர் மக்களின் காணிகளை மீளளித்து மக்கள் மத்தியில் இருந்து வெளியேற்ற வேண்டுமெனவும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
