முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, வியட்நாமில் இருந்தே டுபாய் வழியாக நேற்று இலங்கை திரும்பியிருப்பதாக வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்து முடிவுகள் வெளியான பின்னர், ஜனவரி 11ம் திகதியே நாட்டை விட்டு வெளியேறிய பசில் தம்பதியினர் அமெரிக்காவுக்குச் சென்றதாகவே அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.
பசில் அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
எனினும், பசில் தம்பதியினர் இதுவரை காலமும் வியட்நாமிலேயே தங்கியிருந்ததாக வெளியுறவு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.-
