இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் ஓர் ஆவணம் இருக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் பிரதி அமைச்சரும் இரண்டரை தசாப்பதங்களாக காத்தான்குடி அரசியலில் ஜாம்பவானாக இருந்து வரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் தூர நோக்கு சிந்தனையுடன் இஸ்லாமிய பூர்வீக நூதனசாலையானது காத்தான்குடி கொழும்பு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு தற்காலிகமாக மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்களின் சரித்திரம் மற்றும் அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய பாரிய பங்களிப்புக்களை நினைவு கூறும் வகையிலும், இலங்கையில் முஸ்லிம்களுக்கு சொல்லும்படியான வரலாறு இல்லை என்பதை கடும்போக்குவாதிகள் அரசியல் ரீதியாக காலத்துக்கு காலம் பேரினவாத மக்களிடையே பரப்பி வருவதனால் முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் ஓர் நீண்ட வரலாறு இருக்கின்றது என்றும், முஸ்லிம்களும் இந்த நாட்டினுடைய அனைத்து உரிமைமகளுக்கும் சொந்தம் கொண்டாடக் கூடிய சிறுபான்மை இனம் என்பதனை நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் எடுத்துக்காட்டக் கூடிய வரலாற்று ஆவணமாக தான் இதனை ஓர் தூர நோக்கு சிந்தனையுடன் நிர்மாணிதுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சரும் காத்தான்குடி அரசியல் ஜாம்பவானுமாகிய. அல்-ஹாஜ் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்து வருகின்றார்.
மறுபக்கத்தில் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக நூதன சாலை என்றும், முஸ்லிம்களின் வரலாற்றை ஆவணப்படுத்துகின்றோம் என்ற கருத்தோடு அமைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நூதன சாலையில் மணிதர்களை ஒத்த உருவச் சிலைகளை உள்ளடக்கியதாக பல வரலாற்று சம்பவங்கள் பிரதிபலிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளமையானது இஸ்லாமிய சட்ட திட்டங்கள் முற்று முழுதாக மீறப்படும் சம்பவமாக வரலாற்றில் பதியப்படுவதற்க்கு காத்தான்குடி மண் இடமளிப்பதாகவும், பொதுவாக முஸ்லிம்கள் உருவச் சிலைகளை வணங்கவோ, அவற்றை கண்ணியப்படுத்தவோ அல்லது அவைகளை ஞாபக சின்னங்களாக வைத்திருக்கவோ இஸ்லாம் அனுமதிக்க வில்லை என்றும் இந்த விடயத்தில் ஹதீஸ்களில் கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பத்வா குழு இணைப்பாளர் எம்.ஏ.எம்.ஹாரிஸ் ரசாதி காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பருக்கு குறிப்பிட்ட நூதனசாலை பற்றிய விமர்சன கடிதமொன்றை கடந்த புதன்கிழமை 15.04.2015 அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் இலங்கை தொல்பொருள் நிலையத்தின் பூர்வீக நூதனசாலையாகவும் அகில இலங்கை ரீதியாகவும், முக்கியமாக காத்தான்குடி முஸ்லிம்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் படியாக அமைக்கப்பட்டுள்ள குறிப்பிட நூதனசாலையினை பார்வையிடுவதற்காக இஸ்லாமிய அறிஞர்கள், உலமாக்கள், படித்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் தூர இடங்களிலிருந்து காத்தான்குடியை நோக்கி படையெடுப்பதையும் அவதாணிக்க முடிக்கின்றது.
பார்வையாளர்களின் நெரிசலை கட்டுபடுத்துவதற்காக வெளிப்பிரதேச பார்வையாளர்களுக்காக காலை பத்து மணி தொடாக்கம் மாலை நான்கு மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
புதிதாக காத்தின்குடியில் இலங்கை முஸ்லிம்களின் வராலாறை பிரதிபலிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புலாவின் முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள பூர்வீக நூதசாலைக் காணொளியானது இங்கே எமது இணைய நாளிதல் வாசகர்கள் பார்வையிடுவதற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வீடியோ ஹிஸ்புல்லாவின் காத்தான்குடி இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை:-

.jpg)

.jpg)