இங்கிலாந்தில் நடைபெறும் போட்டியில் சங்கக்காரா அசத்தல்!

ங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டியில், சரே அணியில் விளையாடி வரும் இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா சதம் விளாசினார். சமீபத்தில் நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து சங்கக்காரா ஓய்வு பெற்றார்.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து உள்ளூர் அணியான சரேயில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

உலகக்கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்து சாதனை படைத்த சங்கக்காரா, அந்த அணியிலும் சதம் அடித்தார். அவர் 149 ஓட்டங்கள் (21 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.

ஸ்டீபன் டேவிஸ் (200) உடன் இணைந்து அந்த அணிக்கு வலுவான நிலையை அமைத்து கொடுத்தார். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 563 ஓட்டங்களை குவித்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -