இர்ஸாதியா இஸ்லாமிய பெண்கள் கலாபீடத்தில் அல்-ஆலிமா கற்கை நெறிக்காக விண்ணப்பம் கோரல்!

அபூ-இன்ஸாப்-
ம்மாந்துறை நூர் பள்ளிவாசலுக்கு அருகாமையில் இயங்கி வருகின்ற இர்ஸாதியா இஸ்லாமிய பெண்கள் கலாபீடத்தில் 2015ஆம் வருடத்தில் வதிவிடமற்ற அல்-ஆலிமா கற்கை நெறிக்காக தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளனர்.

விண்ணப்பிக்க தேவையான தகைமைகள்:

அல்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்திருத்தல். 

கல்விப் பொதுத் தராதர சாதரண தரத்தில் சித்தியடைந்திருத்தல், 

17 வயதுக்கு மேற்படாத பெண் மாணவியாக இருத்தல் போன்ற தகுதியுடையவர்கள் நேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தெரிவு செய்யப்படுபவர்கள் வியாழன், வெள்ளி தினங்கள் தவிர்ந்த நாட்களில் காலை 7.30 தொடக்கம் பிற்பகல் 3.30 வரையான நேர இடைவெளியில் 06 ஆண்டுகள் வரை பயிற்றப்படுவதுடன் சமகாலத்தில் அல்-ஆலீம் மற்றும் பொதுக் கலைமாணிப் பட்டப்படிப்புக்களுக்காகவும் வழிநடாத்தப்படவுள்ளனர்.

நாளாந்தம் வீட்டிலிருந்தே வருகைதர அனுமதிக்கப்படும் அத்துடன் தூரபிரதேசங்களில் இருந்து வருகைதரும் மாணவியர்களுக்கு குறைந்த செலவிலான போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளன.

இக் கற்கை நெறியினை கற்க விரும்புகின்ற மாணவிகள் தங்களது பெயர், விலாசம், பிறந்த திகதி, கல்வித் தகைமைகள் அடங்கலாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்தை எதிர்வரும் 2015 மே 01ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர், இர்ஸாதியா இஸ்லாமிய பெண்கள் கலாபீடம், 149, நூர்தீன் லேன், சம்மாந்துறை-09 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலிலோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம். 

மேலதிக விபரங்களுக்கு – 0774407474 – 0774023626
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -