தீபிகாவை அடுத்து பெண்களுக்காக குரல் கொடுக்க வரும் கோலி, ரெய்னா!

பெண்கள் பாதுகாப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் குரல் கொடுக்கும் ரெஸ்பெக்ட்டு ப்ரொடெக்ட் வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தியப் பெண்கள் தங்களின் ஆடை, திருமண வாழ்க்கை, தனித்து இருப்பது அல்லது லெஸ்பியனாக இருப்பது ஆகியவற்றில் சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள குறும்படம் பரபரப்பை ஏற்படுத்தியது.

'மை சாய்ஸ்' என்ற இந்தப் படத்தை காக்டெய்ல் மற்றும் பென்னி நிறுவனம் தயாரித்திருந்தது. ஹோமி அடஜனியா என்பவர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தக் குறும்படத்தில் 29 வயது நடிகை தீபிகா படுகோனே கூண்டில் அடைபட்ட எண்ணங்களை விடுமாறு பெண்களுக்கு அழைப்பு விடுத்து பரபரப்பை உண்டாக்கியிருந்தார்.

தற்போது கிரிக்கெட் வீரர்கள் வீராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரவிசாஸ்திரி, அம்பதி ராயுடு ஆகியோர் தோன்றும் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் அனைவரும் பெண்களின் பாதுகாப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும், உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்' என கூறும்படியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், 'ஒவ்வொரு 3 நிமிடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றன. ஒரு கணக்கீட்டின்படி 50% திருமணமான பெண்களுக்கு அவர்கள் வீட்டிலேயே கொடுமைகள் நடைபெறுகின்றன.

நமது மகளிர் மற்றும் இளம்பெண்களின் பாதுகாப்பிற்கு என்ன செய்ய வேண்டும்' என்று கேள்வி எழுப்பி அந்த வீடியோ தொடங்குகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -