மஹிந்தவுடன் சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் அடிக்கடி தொலைபேசி உரையாடல்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன், சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் அடிக்கடி தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறை உள்ளகத் தகவல்கள் இந்த தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.

காவல்துறைத் திணைக்களத்தின் அதி உயர் பதவியை வகிக்கும் நபரே இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் தொடர்பு பேணி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு இந்த விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

மிக நீண்ட நேரம் முன்னாள் ஜனாதிபதிக்கும், குறித்த உயர் காவல்துறை அதிகாரிக்கும் இடையில் தொலைபேசி சம்பாசனைகள் நீடித்துள்ளன. இந்த உயர் காவல்துறை அதிகாரி அரசியல் அழுத்தங்களுக்கு அடி பணியாத நேர்மையான அதிகாரி என கருதப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தினமன்று இடம்பெற்ற இராணுவ சூழ்ச்சித் திட்டத்தின் போதும் இந்த அதிகாரி கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் எதுவும் செய்ய முடியாது இவ்வாறு நடந்து கொண்டதாக தற்போது சுட்டிக்காட்டப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் காவல்துறை விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. மஹிந்தவுடனான இந்த தொடர்பு காரணமாகவே இவ்வாறு விசாரணைகள் காத்திரமான முறையில் நடைபெற வில்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த கால அரசாங்கம் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதி தோ்தலில் மைத்திாிபால தரப்பினா் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவர் என தேர்தல் மேடைகளில் சூளுரைத்திருந்தனர்.

ஆட்சியை கைப்பற்றியதன் பின்னர் நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்ய விசேட காவல்துறை பிரிவு ஒன்றை இந்த அரசாங்கம் நிறுவியிருந்தது. விசாரணைகளை மலினப்படுத்த காவல்துறை திணைக்களத்தின் சில சக்திகள் முயற்சிக்கின்றனவா என்ற நியாயமான சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

©குளோபல் தமிழ்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -