ரெயில் வண்டியில் மோதுண்டு 22 வயதுடைய வாலிபர் பலி!

ஏஎம்.றிகாஸ்-
ட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரெயில் வண்டியில் மோதுண்டு 22 வயதுடைய வாலிபர் உயிழந்துள்ளார்.

ஏறாவூர் -மாவடிவேம்பு பிரதேசத்தில் (செவ்வாய் கிழமை) இரவு 8.45 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த பத்மநாதன் சதீஸ்வரன் என்ற இளைஞனே பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர்ப் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -