கண்டி, இந்திய உதவி ஸ்தானிகர் ராதா வெங்கட்டராமனை வரவேற்கும் நிகழ்வு!

பைஷல் இஸ்மாயில் -
நுவரெலியா, கந்தபொலை மற்றும் இராகல வர்த்தகர்களின் ஏற்ப்பாட்டில் மலையகத்ததை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களாக இருக்கும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் மற்றும் மனோ கணேசன் சார்பில் மத்திய மாகான சபை உருப்பினர் வீ.குமார, ஆகியோருக்கு பாராட்டும், கௌரவிப்பும், கண்டி உதவி இந்திய உதவி ஸ்தானிகர் ராதா வெங்கட்டராமனை வரவேற்கும் நிகழ்வும் (01.03.2015) நுவரெவியா ஹிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இதன் போது உரையாற்றிய அதிதிகள் அனைவரும் மலையகத்திற்கும் இந்தியவுக்கும் இடையிலான தொடர்பு, தற்போது அது எவ்வாறு இருக்கின்றுது, அதனை மேலும் அதிகரிக்க என்ன செய்யவேண்டும், இந்தியாவிலிருந்து மலையகத்திற்கு வந்த தோட்ட மக்களின் வளர்ச்சியில் இந்தியா எவ்வாறு அக்கரையுடன் செயற்பட வேண்டும். போன்ற விடயங்கள் பேசப்பட்டன.

இந்நிகழ்வில் கண்டி உதவி இந்திய உதவி ஸ்தானிகர் ராதா வெங்கட்டராமன் உரை நிகழ்துகையில், இனி வரும் காலங்களில் அமைச்சர்களின் வேண்டு கோலை ஏற்று இந்தியா மலையகம் சார்பில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி செயற்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.









எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -