ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
தோப்பூர் ஆட்டோ சங்கத்தின் ஏற்பாட்டடில் தோப்பூர் பிரதேச விளையாட்டு கழகங்களுக்கிடையிலான மென் பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி சங்கத்தின் தலைவர் அப்துல்லா நிஷார் தலைமையில்தோப்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தனது பன்முகப்படுத்தபட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து ஆட்டோ சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் டெக்ஸி போட்டுகள் ஆட்டோ சங்க உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன அதே வேளை வெற்றி பெற்ற விளையாட்டு கழகங்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும், பரசில்களும் வழங்ஙகப்பட்டன.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.நிஷாம், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் சல்மான் பாரீஸ் மற்றும் பல விளையாட்டுக் கழச உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)