த.நவோஜ்-
மட்டக்களப்பு ஓட்டமாவடி அல்மஜிமா கிழக்கு பள்ளிவாயல் நிர்வாகத்தினரினால் சனிக்கிழமை மாலை வறிய நிலையில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நடை பெற்றது.
அல் மஜிமா கிழக்கு கிராமத்து தலைவர் ஜ.எல்.எம். முஸ்தபா தலைமையில் நடை பெற்ற மேற் படி நிகழ்வில் மேற்கு அல் மஜிமா பள்ளிவாயல் தலைவர் எவ்.ரபீக் முள்ளிவட்டவான் விவசாய சங்கத் தலைவர் எம்.ரம்ளார் மற்றும் பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அறபா நகரிலிருந்து நாள் தோறும் சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் வரை கால் நடையாக நடந்து சென்று க.பொ.த. உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவிகளின் நலன் கருதியே இவ் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ் மாணவிகளின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு இச் செயற்பாடு மேலும் பங்களிப்பாக இருக்கும் என்று நிகழ்வில் கலந்து கொண்ட சமூக ஆர்வளர்கள் பலர் பள்ளிவாயல் நிர்வாத்தினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)