விசேட தேவையுடையவர்களுக்கான அணுமுறை வசதியை ஏற்படுத்துமாறு விழிப்புணர்வு!

நிஸ்மி-
விசேட தேவையுடையவர்கள் தமது கடமைகளையும் தேவைகளையும் தடங்கலின்றி அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் சென்று மேற்கொள்ளும் வகையில் உட்பிரவேசிப்பு அனுகுமுறை வசதிகளை ஏற்படுத்துவதன் அவசியத்தினை வலியுறுத்தும் வகையிலான விழிப்புனர்வு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(03) அக்கரைப்பறில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட விசேட தேவையுடையவர்களுக்கான வலையமைப்பின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று வலுவிழந்தோருக்கான செயலணிக்குழுவினால் இது ஏற்பாடு செய்யப்பட்டது.

அக்கரைப்பற்று பிரதேச செயலக சமூகசேவைப் பிரிவின் கணிப்பீட்டின் பிரகாரம் இவ்வெல்லைக்குட்பட்ட 67 நிறுவனங்களில் 07 நிறுவனங்களில் மாத்திரமும், 26 பாடசாலைகளில் 03 பாடசாலைகளிலுமே விசேட தேவையுடையோர் சென்று வருவதற்கான உட்பிரவேசிப்பு அனுமுறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக சமூக சேவை பதில் அதிகாரி எம்.எச். சியாத் இதன் போது தெரிவித்தார்.

2006.10.17 ஆம் திகதிய 1467/15 என்ற இலக்க அதிவிசேட வர்த்தமாணி அறிவித்தலின் பிரகாரம் இவ்விடயம் மக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அரச, தனியார் அனைத்துக் கட்டங்களும் அங்கவீனமுற்ற நபர்கள் பிரவேசித்துவரக் கூடியவாறு நிர்மாணிக்கப்படுதல் வேண்டுமென்பதும் அவசியமாகும்.

இந்த நிகழ்வில் உளமருத்துவ சக பணிப்பாளர் எம்.ஐ.ஹைதர், அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ். சமூக வேவை பதில் கடமை அதிகாரி எம்.எச்.சியாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
.
இந்நிகழ்வில் தனியார் மற்றும் அரச வங்கிகள், தேசிய நீர்வழங்கள் சபையின் அக்கரைப்பற்று பிரதான காரியாலயம் ஆகியவற்றுடன் விசேட தேவையுடையோர் சகிதம் சென்று அனுகுமுறை வசதியின் அவசியம் பற்றி விளக்கமளிக்கப்பட்டதுடன் அது தொடர்பான மகஜர் மற்றும் துண்டு பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

உடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி விசேட தேவையுடையவர்களுக்கான வசதியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக நிறுவனங்களின் உயதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -