எச்.எப். ரிஸ்னா-
கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெள்ளி தோறும் நடாத்தப்படும் இலக்கியக் களம் நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது. திருமதி வரதா யோகநாதன் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
சட்டத்தரணி திருமதி இராஜகுலேந்திரா இந் நிகழ்வுக்கு தலைமை தாங்கியதுடன் சிறப்பு உரைஞராக கலந்து கொண்ட வெலிகம ரிம்ஸா முஹம்மத் ஈழத்துப் பெண் கவிஞர்களின் குரல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் கொழுந்து ஆசிரியர் அந்தினி ஜீவா, கலைஞர் கலைச் செல்வன், சட்டத்தரணி இராஜகுலேந்திரா ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள். இறுதியில் தமிழ்ச்சங்கம் சார்பாக சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்களால் உரைஞர் ரிம்ஸா முஹம்மதுக்கு நூல்களும் வழங்கி வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)