ஹாசிப் யாஸீன்-
காரைதீவு சக்தி சமூக முன்னேற்ற சங்கத்தின் 14வது ஆண்டு நிறைவு தின விழா காரைதீவு ஆறாம் பிரிவு பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் நேற்று (03) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
சக்தி சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கண்ணப்பன் சண்முகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வை.கோபிகாந்த் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ.கலையரசனின் பிரத்தியேக செயலாளர் எஸ்.புவிராஜ்,காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.பாஸ்கரன், கிராம சேவக உத்தியோகத்தர்களான செல்வி. வி. சுபாஜினி, ஜெயசுந்தரம், சக்தி சமூக முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் ரீ.கோபிநாத் உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாலர் பாடசாலைக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் சங்கத்திற்கான நிரந்தரக் காரியாலயத்தினை நிர்மாணித்துத் தருமாறு கோரி சங்க பிரதிநிதிகளினால் காரைதீவு பிரதேச சபை தவிசாளரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)