அரசியல் ரீதியாக கழகம் எடுக்கும் முடிவே எனது முடிவு-அல்-அக்ஸாவின் புதிய தலைவர் Dr.காலித்..!!!

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-

ல்குடா பிரதேசத்தில் மிகவும் பழைமையான கழகமான வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் புதிய தலைவராக தலைமைப் பொறுப்பை அன்மையில் ஏற்றுக் கொண்ட வாழைச்சேனை ஆதாரா வைத்திய சாலையின் இளம் வைத்திய அதிகாரியான டாக்கர் காலித் இணைய நாளிதல்களுக்காக எதிர்காலத்தில் அல்-அக்ஸா விளையாட்டுக் கழகத்தினை எவ்வாறு புதிய தலைமையின் கீழ் வழிநடாத்தப்படும் என்ற கேள்வியோடு இன்னும் பல நிகழ்கால எதிர்கால அரசியல் சம்பந்தமான கேல்விகளுக்கு கூறிய கருத்துக்களும் அதனுடைய காணொளியும் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அஹமட் இர்ஸாட்:- கல்குடாவில் நீண்டகால வரலாற்றை கொண்ட வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள உங்களுடைய எதிர்கால திட்டங்கள் என்ன?

Dr.காலித்:- பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், முதலில் உங்களுக்கு நன்றி கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நீண்ட கால வரலாற்றினை கொண்ட அல் அக்ஸா விளையாட்டுக் கழகத்தினை காலகாலமாக பல சிறந்த தலைவர்கள் வழிநடாத்தி இருக்கின்றார்கள். காலத்தோடு ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக சமூகத்தின் மத்தியில் கழகத்தின் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் தேய்வடைந்து காணப்பட்டாலும் தற்போது விளையாட்டுக் கழகத்தையும், விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த வீரர்களை நெறிப்படுத்துவதற்காகவும், இப்பிரதேசத்தின் சிறுவர்களையும் , இளைஞ்ஞர்களையும் ஒருங்கினைத்து அவர்கள் எவ்வழிகேட்டிலும் விழுந்து விடாமலும் ஆரொக்கியமான சிறந்த சுகாதரத்தை கொண்ட இளம் சமூதாயத்தை கட்டியெழுப்புவதற்காகவும், வேறு பல முன்னெடுப்புக்களுக்காகவுமே நான் அல்-அக்ஸா விளையாட்டுக்கழகத்தின் தலைமைப் பொறுப்பை எற்றுக்கொண்டுள்ளேன்.

அஹமட் இர்ஸாட்:- பழைமைவாந்த கழகம் என்ற ரீதியில் மூத்த உறுப்பினர்கள் இருக்கதக்க தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நீங்கள் பிரச்சனைகள் வரும்போது எவ்வாறு அதனை கையாள திட்டமிட்டுள்ளீர்கள்?

Dr.காலித்:- இன்ஸா அல்லாஹ் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமான முறையில் தீர்வுகள் எட்டப்பட்டு எந்தவொரு பிரச்சனையான விடயங்களையும் இலகுவான தீர்வினை கொண்டு முடிவுக்கு கொண்டுவருவதும், இப்பிரதேச இளைஞர்களுக்கும் சமூதாயத்துக்கும் சிறந்த முன்னோடியாகவும் சேவை செய்யக்கூடிய அமைப்பாகவும் கழகத்தை எதிர்காலத்தில் வழிநடாத்திச் செல்வதற்க்கு திட்டமிட்டுள்ளோம்.

அஹமட் இர்ஸாட்:- அல்-அக்ஸா விளையாட்டுக் கழகத்தை பொறுத்தவரையில் பிரதேசத்தில் அரசியல் ரீதியாக விமர்சிக்கப்படும் கழகமாகும். இதனடிப்படையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இளம் வைத்தியரான நீங்கள் கழகத்தின் அரசியல் சார்பான விடயங்களை எவ்வாறு கையாளப் போகின்றீர்கள்?

Dr.காலித்:- இந்த நாட்டினை பொறுத்தவரையில் அரசியல் ரீதியான முடிவினை எடுக்கும் உரிமையானது ஒவ்வொருத்தருக்கும் இருக்கின்ற ஜனநாயக உரிமையாகும். அதே போன்று அல்-அக்ஸா விளையாட்டுக் கழகமும் அதன் அரசியல் முன்னெடுப்புக்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது. ஏனென்றால் கழகத்தில் இருப்பவர்களும் இந்த நாட்டின் பிரஜைகளேயாகும். அவர்களுக்கும் எல்லாவகையான ஆசாபாசங்களும் இருக்கின்றது. அந்த வகையில் கழகத்தில் இருக்கும் எவருக்கும் ஜனநாயக நாடு என்ற ரீதியில் தனிப்பட்ட முடிவெடுக்கும் சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் நான் தலைமைப் பொறுப்பை ஏற்றதற்குப் பிற்பாடு கழக உறுப்பினர்களுக்கு அரசியல் ரீதியாக முடிவெடுக்கும் பூரண சுதந்திரத்தை வழங்கி இருக்கின்றேன். இன்னும் பிரதேசத்தின் அரசியல் முன்னெடுப்பு என்று வரும் பட்சத்தில் எனது தனிப்பட்ட விருப்பங்கள் கழகத்தின் மீது தினிக்கப்படவுமாட்டாது. அத்தோடு எனது முடிவுகள் ஓட்டு மொத்த கழக அங்கத்தவர்கள் எடுக்கின்ற முடிவில் வேறுபட்டாலும் கழகம் அரசியல் ரீதியாக எடுக்கின்ற முடிவானது பிழையாயினும் சரி சரியாயினும் சரி கழகத்தால் எடுக்கப்பட்ட முடிவென்பதால் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவாகவே இருக்கும்.

அஹமட் இர்ஸாட்:- சமூகத்தில் சுகாதார விழிப்புனர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சமூக வலைத்தளம் ஒன்றை உறுவாக்க உள்ளதாக அறியக் கூடியதாக இருகின்றது இது சம்பந்தமாக உங்களுடைய கருத்து?

Dr.காலித்:- எமது பிரதேசமாக இருக்கட்ட்டும், நாடாக இருக்கட்டு, அல்லது உலகத்தை அடிப்படையாக வைத்தாலும் தமிழில் சுகாதாரத்தின் விளக்கமானது அரிதாகவே இருக்கின்றது. தமிழ் பேசும் மக்கள் சுகாதார அறிவினை பெற்றுக் கொள்வதில் அடிமட்டத்திலேயே இருக்கின்றனர். நோய்கள், மருந்துகள் பற்றிய அறிவானது போதியளவு மக்களிடம் காணப்படுவதில்லை இதனால் மக்கள் பல அசெளகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இந்த பிரச்சனைய முடுவுக்கு கொண்டுவரும் அடிபடையில் தன்னால் முடிந்தவரையில் மக்களை விழிப்புனர்ச்சியின்பால் கொண்டுவருவதற்காக TAMIL HELTH INFO என்ற இணையத்தளத்தினை உறுவாக்கி அதனூடாக தமிழ் மொழியில் நோய்கள், மருந்துகள் சம்பந்தமான அடிப்படை விளக்கங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதே எனதும், இணையத்தளத்தினதும் நோக்கமாகும்.

அஹமட் இர்ஸாட்:- நீண்ட வரலாற்றை கொண்ட அல்-அக்ஸா விளையாட்டுக் கழகத்தில் பழைய , புதிய, தற்போதைய உறுப்பினர்கள் என ஒரு மக்கள் சக்தியே இருக்கின்றது. இந்த நிலையில் எல்லோரையும் சேர்த்து கழகத்தை முன்னெடுத்துச் செல்லப் போகின்றீர்களா? அல்லது தற்போது கழகத்தில் இருக்கும் அங்கத்தவர்களை மட்டும் வைத்து கழகத்தை வழிநடாத்தப் போகின்றீர்களா?

Dr.காலித்:- கழகத்தில் ஆரம்ப காலத்தில் சிறு சிறு பிரச்சனைகள், வாக்குவாதங்கள்,அரசியல் ரீதியான காரணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் பலர் பிரிந்து சென்றிருக்கலாம். ஆனால் தற்போது எமது கழகமானது முன்னர் துரதிஸ்ட்டவசமாக உறுப்பினர்கள் மத்தியில் இடம்பெற்ற பிரச்சனைகளை சுமுகமான நிலைக்கு கொண்டுவருவதும் இனிமேல் அவாறான பிரச்சனைகள் எதிர்காலத்தில் ஏற்பாடதிருக்க சகல முயற்ச்சிகலையும் செய்து வருக்கின்றது. அந்த வகையில் எமது அல்-அக்ஸா விளையாட்டுக் கழகத்திலிருந்து விலகிச் சென்ற அனைத்து அல்-அக்ஸா விளையாட்டுக் கழக உறுப்பினர்கலையும் முக்கியமாக மூத்த உறுப்பினர்கள் அனைவரையும் புதிய தலைவர் என்ற வகையில் மீண்டும் கழகத்துடன் இணைந்து கொண்டு கழக செயற்பாடுகளில் பங்குகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அஹமட் இர்ஸாட்:- கல்வித்துறையை வாழ்கையின் இலட்ச்சியமாகக் கொண்டு அதில் வெற்றிபெற்று வைத்தியராக வந்துள்ள நீங்கள் பிறந்து, வளர்ந்து கல்வி கற்ற பிரதேசத்தில் கல்வித்துறை முன்னெடுப்பதை தவிர்த்து விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்க்கு முடிவெடுத்தமைக்கான காரணங்கள் ஏதும் இருக்கின்றனவா?

Dr.காலித்:- முழு கல்குடா பிரதேசமும் எமது பிரதேசம் என்ற ரீதியில் கல்வி வளர்ச்சியில் உச்சத்தில் இருக்க வேண்டும் என்பதோடு அனைத்துத் துறைகளும் முதன்மையடைய வேண்டும். முக்கியமாக விளையாட்டுத் துறையில் கல்வி அறிவானது இன்றியமையாத ஒன்றாகும். அறிவில்லாமல் வேறு துறைகளில் சென்று பிரகாசிப்பது முடியாத விடயமாகும். அதனால் அறிவுத்துறைதான் எமது பிரதேசத்தின் முதுகெழும்பாகும். அதனுடன் சார்ந்தே வேறு செயற்பாடுகளான விளையாட்டு மற்றும் ஏனைய விடயங்களை முனெடுத்துச் செல்ல வேண்டும். அந்த வகையில் நான் விளையாட்த்துறையை தேர்ந்தெடுத்துள்ளேன். ஆனால் விளையாட்த்துறையை மட்டுமே நான் முன்னெடுத்துச் செல்வது என்பது இதன் கருத்தல்ல.

அஹமட் இர்ஸாட்:- உங்களுடன் ஒன்றாக பணிபுரிந்த டாக்டர் முஸ்தாபா வருகின்ற பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டு வருக்கின்றார். அதனடிப்படையில் நீங்கள் வைத்தியர் என்ற ரீதியில் அரசியலில் டாக்டர் முஸ்தபாவுக்கு உங்களுடைய பூரண ஆதரவை வழங்குவீர்களா?

Dr.காலித்:- இது பற்றி தற்போது பெரிதாக கருத்துக் கூற முடியாது. வைத்திய சாலையில் பிரச்சனைகள் வரும் போது எங்களுக்கிடையில் ஒற்றுமையைக் கடைப்பிடித்து சுமுகமான முறையில் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வோம். அரசியல் என்று வரும் பட்ச்சத்தில் அந்ததந்த நேரத்தில் அதற்கான உரிய பதில்கள் வழங்கப்படும்.

அஹமட் இர்ஸாட்:- வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அண்டிய பிரதேசத்தில் அல்-அக்ஸாவின் காரியாலையம் அமைந்து காணப்படுவதால் பாடசாலை மாணவர்கள் கழக செயற்பாடுகளில் கவர்ந்திழுக்கப்பட்டுவதனால் அவர்களுடைய கல்வி செயற்பாடுகளில் பின்னடைவுகள் இடம் பெறுகின்றது என்ற பரவாலன கருத்துக்களுக்கு உங்களுடைய பதில் என்ன?

Dr.காலித்:- ஒரு மணிதனுடைய வாழ்வில் கல்வி மட்டுமே முக்கியமான விடயம் எனக் கூறமுடியாது. மற்றைய எல்லா துறைகளிலும் அவர்கள் கால்பதித்து செயற்பட வேண்டும். கல்விதுறையை மட்டும் நாடிச் செல்வதனால் பல நோய்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் ஆளாகிவிடுவார்கள். விளையாட்டுக் கழகம் என்பது சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் முக்கியமான அமைப்பாகும். அதில் உள்ளவர்கள் பிழையான பாதையின் மூலம் வழிநடாத்தப்படுவது என்பது முந்திய காலங்களில் இடம்பெற்றிருக்கலாம். அவற்றைப் பற்றிய கருத்துக் கூறுவது இப்போது நல்லதல்ல. ஆனால் இனிவரும் காலங்களில் அல்-அக்ஸா விளையாட்டுக் கழகத்தில் அங்கத்தவர்களாக இருக்கும் சிறுவர்களோ அல்லது உறுப்பினர்களோ வழிதவறிச் செல்ல இடமளிக்கப்படமாட்டாது என்பதை தான் உறுதியாக கூறுவதாக தெரிவித்தார்.

வீடியோ அல்-அக்ஸாவின் புதிய தலைவர் Dr.காலித்தின் கருத்துக்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -