சீனாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரம் அமைக்கும் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனம் ஒன்று சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த கொழும்பு துறைமுக நகரத்தை அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்திருந்தது.
செப்டம்பர் 2014 இல் தொடங்கப்பட்ட இந்த கொழும்பு துறைமுக நகர திட்டத்தை நிறுத்தினால் புதிய அரசாங்கத்திற்கு பாரிய இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
