யாழ் நகரில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த போர்க்குற்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
