இக்பால் அலி-
இஸ்லாமிய பிரச்சாரப் பணியை மேற்கொள்வது மார்க்கத்தை அறிந்த ஒவ்வொருவர் மீதும் இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. எனினும் இந்தப் பிரச்சாரப் பணியின் உன்னத நோக்கங்கள், அதன் குறிக்கோள்கள், பிரச்சார அணுகுமுறைகள், ஸலஃபுகளின் பிரச்சார வழிமுறைகள் குறித்த சரியான புரிதல் இன்மையால் இலங்கை தவ்ஹீத் அமைப்புக்களிடையே கடும் போட்டி மனப்பான்மை ஏற்பட்டு பாரிய முரண்பாடுகளுக்கும் பிரிவினைகளுக்கும் அவை இட்டுச் சென்றிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இது பிரச்சாரப் பணிகளுக்கு ஓர் ஆரோக்கியமான செயலல்ல என்று ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ;nஷய்க் முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி தெரிவித்தார்.
உலமாக்களுக்கான இஸ்லாமிய தஃவாவில் ஸலஃபுகளின் மன்ஹஜ் தொடர்பிலான தெளிவூட்டல் கருத்தரங்கு 03-02-2015 இன்று தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடத்தின் கணனி தொழில் நுட்ப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து தலைமையுரையாற்றும் போது அஷ;nஷய்க் முஹம்மது அபூபக்கர் சித்தீன் மதனி அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான மற்றும் நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த உலமாக்கள் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
எங்களுடைய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா அமைப்பு 1947 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த அமைப்பாகும். இது அல்குர்ஆனும். அல் ஸுன்னாவும் மக்கள் மத்தியில் எத்தி வைப்பதற்காக ஓரணியின் கீழ் செயற்படுவதற்கு ஆரம்பிக்கப்பட்டது.
இது இன்றுவரை எந்த தங்கு தடையுமின்றி வளர்ச்சி கண்டு வந்துள்ளது என்பதை இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் நன்கறிவார்கள். ஆனால் இன்று அது சிதைவடைந்து சென்று கொண்டிருக்கிறது.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இதில் மிக முக்கியமாக எமக்கிடையே கொள்கையில் தெளிவும் சிரியான செயற்பாடுகளுமின்யே என்று குறிப்பிட முடியும். இனை நிவர்த்தி செய்து நாம் பயணித்தால் வெற்றியைக் காண முடியும்.
எமது ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறுபட்ட எதிர்ப்புகளும் சவால்களும் இருந்தன. ஆனால் அன்று மிக சொற்பமாதாக உள்ளன. எங்களுக்கிடையே காணப்படுகின்ற முரண்பாடுகள் அர்த்தமற்ற வாதப்பிரதிவாதங்கள் எம்மை பின்னடையச் செய்துள்ளது. இதற்கான சரியான காரணங்களை அறிந்து நாம் தெளிவான பாதையில் செல்ல வேண்டும்.
உலமாக்கள் இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் ஈடுபடுபவர்கள் அதன் பிரச்சாரப் பணியின் யதார்த்த நிலை அறிந்து தூய்மை கெடாமல் அதன் கண்ணியத்தைப் பாதுகாத்து செயற்படுதல் அவசியமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விசேட வளவாளர்களாக எஸ். எச். எம். இஸ்மாயீல் (ஸலபி) எம். ஐ, முபாரக் ஸலபி, வைத்தியதிகாரி ரஈசூதீன் சரஈ. எம். சீ, அன்சார் ரியாதி, எம். எஸ். எம். இம்தியாஸ் ஸலபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
.jpg)
.jpg)
.jpg)