ஜனாதிபதி தேர்தலின் போது இரட்டை வேடம் போட்டு: கண்ணீர் விட்டு அழுத முன்னாள் அமைச்சர்!

டந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் காணி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இரட்டை விளையாட்டை ஆடியதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தம்புள்ளை நகர சபை உறுப்பினர் அனுர பண்டார பியரத்ன தெரிவித்துள்ளார். நகர சபையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் ஆடிய இரட்டை விளையாட்டை உறுதிப்படுத்தக் கூடிய சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னகோன் அன்னப் பறவை சின்னத்திற்கே வாக்களித்தார். இதனை உறுதியாகி கூறுவதாகவும் அனுர பண்டார பியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் காணி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தம்புள்ளை நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது அரசாங்கத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி அழுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அன்று கூறிய கருத்துக்களுடன் - கண்ணீர் விட்டு அழுததும்
நான், சுத்தமான சிறீ லங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவன், எனக்கு நேர்ந்த சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்து கூறினேன், அவரது மகன் நாமல் ராஜபக்ஷவிடமும் எடுத்துரைத்தேன். என்னுடைய கதையையே யாரும் கேட்கவில்லை. கட்சிக்கு ஏற்படும் அனர்த்தம் தொடர்பில் நான் கூறியதை எனது தந்தைகூட ஏற்றுக்கொள்ளவில்லை.

நான் பழைய பொலிஸ் காரன், அது எனக்கு மறுபக்கம் அந்தப்பக்கமும் எனக்கிருக்கின்றது. இந்த பக்கமும் இருக்கிறது. சிறீ லங்கா சுதந்திரக்கட்சியை யாருக்கும் அடிமையான கட்சியாக நாளைக்கு விடுவதற்கு நான் தயாரில்லை. கட்சியை சரியான நிலைப்படுத்தி அடுத்த தேர்தலுக்கு செல்லவேண்டும் அந்த பக்கத்திலேயே நானிருக்கின்றேன் என உரையாற்றிக் கொண்டிருந்த போதே சுமார் ஐந்து நிமிடங்கள் கண்ணீர்விட்டழுதார் இதனால் அக்கூட்டத்தில் ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -